திருக்கோவிலூர் அருகேரேணுகாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்கோவிலூர் அருகே ரேணுகாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே பனப்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீரேணுகாம்பிகை அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுயம்பு ரேணுகாம்பிகை அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதில் பனப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.