பூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகள் சீரமைப்பு


பூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகள் சீரமைப்பு
x

பூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகளை தொழிலாளர்கள் கருங்கல் மூட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனர்.

திருவள்ளூர்

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் மற்றும் வரத்து கால்வாய் மூலமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கரைகளில் சில இடங்களில் சேதம் அடைந்து விறிசல்கள் ஏற்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டது.

சேதமடைந்த கரைகளை சீரமைக்க மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஜான் வர்கீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் தொழிலாளர்கள் சேதம் அடைந்த கரைகளை கருங்கல் மூட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனர்.


Next Story