உயர் மின்னழுத்ததால் மின் சாதனங்கள் பழுது


உயர் மின்னழுத்ததால் மின் சாதனங்கள் பழுது
x

உயர் மின்னழுத்ததால் மின் சாதனங்கள் பழுது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் திடீரென மின்சாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. திடீரென்று 260 வோல்டேஜ்க்கு மேல் மின் சப்ளை ஆனது. இதனால் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதனங்கள் திடீரென்று பழுதானது. அதிக மின்னழுத்தம் காரணமாக ஏ.சி., குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்டவைகள் பழுதானதாக அப்பகுதியினர் கூறினர்.. இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் கேட்டபோது, மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று காற்று காரணமாக உரசியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எனினும் இதுகுறித்து எந்த புகார் வரவில்லை.

அந்தபகுதியில் தற்போது சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story