நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைப்பு


நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்  சீரமைப்பு
x

நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைப்பு

தஞ்சாவூர்

மெலட்டூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.

நெடுஞ்சாலையில் பள்ளங்கள்

பாபநாசம் தாலுகா மெலட்டூரில் இருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைப்பு

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை சீரமைத்து புதுப்பித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story