தாமிரபரணியில் வெள்ளத்தால் சேதமடைந்த உரைகிணறுகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்


தாமிரபரணியில் வெள்ளத்தால் சேதமடைந்த உரைகிணறுகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்
x

சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 33 உரை கிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

நெல்லை,

நெல்லையில் மொத்தம் 33 உரை கிணறுகள் சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு இந்த உரை கிணறுகள் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக தாமிரபரணிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதன் விளைவாக பல்வேறு உரை கிணறுகள் சேதமடைந்துள்ளன. சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 33 உரை கிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அதனை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தண்ணீர் முழுமையாக தாமிரபரணி ஆற்றில் குறைந்து சாதாரண நிலைக்கு திரும்பினால் மட்டுமே முழுமையாக சரி செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நாட்கள் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று கிணறுகள் சரி செய்யும் பணி நிறைவு பெற்று முழுவதும் குடிநீர் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.

1 More update

Next Story