கோத்தகிரி சாலையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: போக்குவரத்துக்கு அனுமதி


கோத்தகிரி சாலையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: போக்குவரத்துக்கு அனுமதி
x

கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் விழுந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 130 செண்டிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

கோத்தகிரி பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மாமரம், முள்ளூர் ஆகிய பகுதிகளில் ராட்சத காட்டு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

இதே போல கேர்பெட்டா பிரிவு பகுதியிலும் மரம் சரிந்து விழுந்ததால், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல இந்த சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தன. இதனை தொடர்ந்து, கோத்தகிரி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது மண் சரிவு மற்றும் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் பணிகள் முடிவடைந்த நிலையில், கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story