பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு திறந்து வைப்பு


பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
x

பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் வாலாஜாபாத்தையும் அவளூரையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்து காணப்பட்டது.

இதை தற்காலிகமாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வாலாஜாபாத்- அவளூர் இடையிலான தரைப்பாலத்தை சீரமைக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி பாலாற்றின் குறுக்கே தரைப்பால பணிகள் தொடங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதற்கு காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் வாலாஜாபாத் ஆர்.கே. தேவேந்திரன், காஞ்சீபுரம் மலர்க்கொடி குமார், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story