தண்ணீர் சூடேற்றும் கருவிகளில் பழுது

உண்டு உறைவிட பள்ளிகளில் தண்ணீர் சூடேற்றும் கருவிகளில் பழுது ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி
பந்தலூர்
நீலகிரி மாவட்டத்தில் 20 அரசு உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு ஆதிவாசி மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சுடுதண்ணீர் வழங்குவதற்காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் வாட்டர் ஹீட்டர்கள்(தண்ணீர் சூடேற்றும் கருவி) வழங்கப்பட்டது.
இதற்கிடையே பந்தலூர் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் வாட்டர் ஹீட்டர்கள் பழுதடைந்து கிடப்பதால், மாணவர்களுக்கு சுடுதண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, வாட்டர் ஹீட்டர்களை பராமரிக்கவும், புதிய கருவிகள் வழங்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story