குடியரசு தினவிழா: கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு...!


குடியரசு தினவிழா: கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு...!
x

குடியரசு தினவிழாவை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சென்னை,

நாடுமுழுவதும் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும்.

ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.


Next Story