சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை


சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
x

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை, குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே டியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது.

1 More update

Next Story