தொப்பூருக்குஇன்று வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


தொப்பூருக்குஇன்று வருகை தரும்                    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதி.மு.க.வினர்  சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூருக்கு இன்று (திங்கட்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொப்பூரில் அரசு விழா நடைபெறும் பந்தலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, கீரை விஸ்வநாதன், ராஜேந்திரன், சூடப்பட்டி சுப்பிரமணி, செந்தில்குமார், மாவட்ட அவைத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், நகரச் செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

அண்ணா பிறந்த நாளாம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைக்க தொப்பூருக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வருகை தரும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தலைவரின் வழியில்...

கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் தான் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கினார். தற்போது இந்த திட்டம் ஆலமரம் போல் வளர்ந்து பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோன்று தலைவரின் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து அதன் தொடர்ச்சியாக விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைக்க இன்று வருகிறார். இந்த திட்டமும் பெரிய வெற்றி பெற்று பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற போகிறார்கள். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட மக்கள் என்றென்றும் தலைவருக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, ரேணுகா தேவி, உமாசங்கர், ராஜாகுமாரி, கிருஷ்ணகுமார், ஆறுமுகம், தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர்.சிவகுரு, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன் முருகேசன், செல்வராஜ், வேடம்மாள், சக்திவேல், மாது, சேட்டு, கோபால், கிருஷ்ணன், செங்கண்ணன், சௌந்தரராஜன். அன்பழகன், சந்திரமோகன், சரவணன், முத்துக்குமார், சிவப்பிரகாசம், நெப்போலியன், உள்ளிட்ட பேரூராட்சி செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம் நன்றி கூறினார்.


Next Story