தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும்


தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும்
x

பதவி உயர்வுக்கான தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

பதவி உயர்வுக்கான தடை ஆணையை நீக்க பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பதவி உயர்வு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசு உயர், மேல்நிலை பள்ளியில் சுமார் 6000 இடைநிலை ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். 2003-க்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டு காலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 2020-21-ல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வுக்கான தேதி குறிப்பிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல இந்த ஆண்டும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

மேல்முறையீடு

1.1.2022-ன் படி முழுமையாக அனைத்து பாடங்களுக்கும் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை 14 மற்றும் 15-ந் தேதிகளில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு பிறகு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெறப்பட்டது.

இது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முன்னுரிமை பட்டியலின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story