துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும்


துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் தற்போது கட்டிடம் சேதமடைந்து பயன்பாடற்று இருந்து வருகிறது. இதன் காரணமாக துணை சுகாதார நிலையம் ஊராட்சி மன்ற அலுவலக வராண்டாவில் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, கர்ப்பிணிகள் பரிசோதனை, பிரசவம் போன்ற மருத்துவசேவைகளை பெறுவதற்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இங்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளார்.

1 More update

Next Story