அரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
அரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியத்தில் அமைந்துள்ள செந்தமிழ்நகர், தரிகொம்பன், முனைவென்றி அறிவொளிநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆதி திராவிட மக்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு இதுவரையிலும் வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். வாரிசு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யமுடியவில்லை. அரசின் சலுகைகளை பெற முடியவில்லை. பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டும் இதுவரையிலும் அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.