மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு மீதான ரசீது விரைந்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு மீதான ரசீது விரைந்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2023 12:30 AM IST (Updated: 21 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு மீதான ரசீது விரைந்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை போலீஸ் நிலைய சரகத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் போலீஸ் நிலையம் வந்து புகார் கொடுக்கின்றனர். இவ்வாறு பல்வேறு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் சி.எஸ்.ஆர். காப்பி வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் சி.எஸ்.ஆர். ரசீது உடனடியாக வழங்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை விட்டு விட்டு தினமும் போலீஸ் நிலையத்திற்கு சி.எஸ்.ஆர். ரசீது வாங்க வந்து செல்லும் நிலை உள்ளதாக கூறினர். எனவே, மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story