ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டுகோள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
தா.பழூரை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் கலெக்டர் ஒரு மனு அளித்தார். அதில், தா.பழூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அருகில் உள்ள 30 கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் 12 மணிக்கு மேலும், இரவு நேரங்களிலும் டாக்டர்கள் இல்லை. இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் கடித்ததால் சிகிச்சைக்கு வருபவர்கள், இங்கு டாக்டர் இல்லாததால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதேபோல் கர்ப்பிணிகளும் வெளியூர் மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story