விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறுவதை எளிதாக்க வேண்டுகோள்


விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறுவதை எளிதாக்க வேண்டுகோள்
x

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறுவதை எளிதாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியின் பெரம்பலூர் நகர செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் பேசினார். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவதற்காக அனைத்து கிளை கமிட்டிகளிலும் காப்பு கட்ட வேண்டும். இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோருக்கு இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து கொண்டாடுவதற்கு அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில் ஒற்றை சாளர முறையை போலீஸ் நிலையம் மூலம் மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story