பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை


பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
x

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நீதிநாயகம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு மாநில இணை செயலாளர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் சீத்தாராமன் சங்க கொடியை அறிமுகப்படுத்தி பேசினார்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க புதிய அரசாணை வெளியிடும்போது தமிழக அரசு விதி எண் 41 ஆசிரியர்களுக்கு பொருந்தும் என அரசாணை வெளியிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி நியமனத்தில் இருந்த 10 சதவீதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story