சுற்றுலா நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்
சுற்றுலா நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் 'உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆபரேட்டர் மற்றும் கேரவன் ஆபரேட்டர்' ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 'உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆபரேட்டர் மற்றும் கேரவன் ஆபரேட்டர்' ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளமான https://www.tntourismtors.com-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை செல்போன் எண்கள் 9787484754, 7397715685 மற்றும் மின் அஞ்சல் முகவரி ariyalurtourism@gmail.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.