வனவிலங்கு பட்டியலில் இருந்து நாய்கள்-முயல்களை நீக்க கோரிக்கை


வனவிலங்கு பட்டியலில் இருந்து நாய்கள்-முயல்களை நீக்க கோரிக்கை
x

வனவிலங்கு பட்டியலில் இருந்து நாய்கள்-முயல்களை நீக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள தெலுங்கப்பட்டியில் நாட்டு இன நாய்கள் வளர்ப்போர் மற்றும் வேட்டைக்காரர்கள் சங்கம் சார்பாக நாட்டு இன நாய்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தெலுங்கப்பட்டி ஜமீன்தார்கள் தர்மபிரபு, அச்சுதராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய மாநில பொது செயலாளர் ஜெயசீலன், கரூர் மாவட்ட வேட்டைக்காரர்கள் சங்கத்தலைவர் சடையன், பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கிராம தெய்வங்களுக்கு பாரிவேட்டைக்கு நாட்டு இன நாய்களை பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும். அழிந்து வரும் நாட்டின நாய்களை ராணுவம், பேரிடர் மீட்பு, ெரயில்வே பாதுகாப்பு, போலீசார் ஆகியவற்றில் கொம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நாய் இனங்களை அதிகமாக பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்கு பட்டியலில் இருந்து நாய்கள் மற்றும் முயல்களை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story