குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை


குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
x

குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

குன்னம்:

கோவில் குளம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ஆயிரவள்ளி அம்மன் கோவில் அருகில் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி பராமரிக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நீராதாரமாக விளங்கிய இந்த குளத்தில் தாமரை பூ, இலை என வருட குத்தகைக்கு விடப்பட்டும், மீன்கள் வளர்க்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டும் ஊராட்சியின் வருமானம் பெருக்கப்பட்டது. அருகே உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பாசனம் செய்யப்பட்டு விவசாயம் செழிப்பாக நடந்தது.

ஆனால் தற்போது குளத்தை சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதோடு, குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கோரிக்கை

இந்த குளத்தின் அருகில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகாமக திருவிழா நடைபெறும்போது கும்பகோணம் மகாமக குளத்திற்கு இணையாகவும் அந்த குளம் போற்றப்படுகிறது. மிகச்சிறப்பு வாய்ந்த இந்த குளத்தில் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பைகள் வீசப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த குளத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, குளத்தை தூர்வாரியும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story