மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அரியலூரில் அமைக்க கோரிக்கை


மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அரியலூரில் அமைக்க கோரிக்கை
x

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அரியலூரில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தளவாய், பொய்யூர் ஆகிய இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் அரியலூர் செந்துறை, ஜெயங்கொண்டம், சாத்தமங்கலம், நடுவலூர், தேளூர் உள்பட பல துணை மின் நிலையங்கள் உள்ளன. இதைநிர்வகிக்கும் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பெரம்பலூரில் உள்ளது. அரியலூர் நகரின் ஒரு பகுதிக்கு மின்வினியோகம் பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. இது பற்றி தகவல் கேட்டால் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது என்று கூறி விடுகின்றனர். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூத்தூரில் இருந்து மின்சாரம் வரும் பாதையில் பல கோளாறுகள் ஏற்பட்டு அரியலூர் நகரின் பாதி பகுதியில் பல மணி நேரம் மின் வினியோகம் இல்லாமல் இருந்தது.

அரியலூரில் உள்ள மின்சார துறை பணியாளர்கள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அவர்கள் கூத்தூர் வரை சென்று அதனை சரி செய்து வருகின்றனர். அரியலூர் நகரில் வழங்கப்படும் மின்சாரம் முழுவதும் இந்த மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து வழங்க வேண்டும் என்பது ஒரு நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மேலும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அரியலூரில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.


Next Story