தவணை தொகையை விவசாய பெற ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டுகோள்


தவணை தொகையை விவசாய பெற ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டுகோள்
x

தவணை தொகையை விவசாய பெற ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் (பி.எம்.கிசான்) கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 964 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 11-வது தவணை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் விவசாயிகள் 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்த்தல் (e KYC) மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும். தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக ரூ.15 இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்படவில்லை எனில் 12-வது தவணை பெறுவதற்கு முன்னர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story