நாகூர் தர்காவில் காணாமல் போன 2 குழந்தைகள் மீட்பு


நாகூர் தர்காவில் காணாமல் போன 2 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:47 PM GMT)

நாகூர் தர்காவில் காணாமல் போன 2 குழந்தைகள் மீட்பு காவலாளிக்கு பெற்றோர் பாராட்டு

நாகப்பட்டினம்

நாகூர்:

நோன்பு பெருநாளை அடுத்து நாகூர் தர்காவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நாகூர் தர்காவிற்கு பெங்களூருவை சேர்ந்த முஹம்மது மக்சூத் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது முஹம்மது மக்சூத்தின் மனைவி கூட்ட நெரிசலில் தனது குழந்தைகளை தொலைத்து விட்டார். தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை தேடித்திரிந்தனர். அப்போது தர்கா காவலாளி அய்யப்பன் என்பவர் அங்கு 2 குழந்தைகள் தனியாக இருப்பதை கண்டு தர்கா அலுவலகத்திற்கு குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றாா். பின்னர் இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு 2 குழந்தைகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து காணாமல் போன 2 குழந்தைகளையும் கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு, தர்கா நிர்வாகத்தினருக்கும், முஹம்மது மக்சூத் மற்றும் அவரது மனைவியும் நன்றி தெரிவித்தனர்.


Next Story