நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு


நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அருகே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீரில் மூழ்கினர்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில், மாலுமி உள்ளிட்ட 8 பேர் பயணம் செய்தனர்.

மாலத்தீவுக்கு அருகே 60 கடல் மைல் தொலைவில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தபோது அதிக காற்று வீசியதால் திடீரென தோணி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தோணியில் பயணம் செய்த 8 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

7 பேர் மீட்பு

அவர்களில் 7 பேரை அந்தப் பகுதியில் சென்ற சக மீனவர்கள் மீட்டதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நீரில் மூழ்கிய மற்றொரு மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மீட்கப்பட்ட 7 மீனவர்களையும் தூத்துக்குடி கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீரில் மூழ்கியவரை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தூத்துக்குடியில் உள்ள தோணி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story