திருமானூர் கொள்ளிடம்ஆற்றில் இருந்து 9 கற்சிலைகள் மீட்பு
திருமானூர் கொள்ளிடம்ஆற்றில் இருந்து 9 கற்சிலைகள் மீட்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் படித்துறையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கால்களில் வித்தியாசமான பொருள் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது கற்சிலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மீண்டும் நீரில் மூழ்கி சாமி சிலைகளை எடுத்தனர். மொத்தம் 9 கற்சிலைகள் இருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த சிலைகளுக்கு பூ, பொட்டு வைத்து வழிபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிலைகளை மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும்போது கரையின் ஓரத்தில் இருக்கும் கோவில்களில் இருந்து அடித்து வரப்பட்ட சிலைகளா? அல்லது கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story