தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி விட்டு தலைமறைவான தம்பதி மீட்பு


தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி விட்டு தலைமறைவான தம்பதி மீட்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.25 கோடி கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வ தாக கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான தம்பதி மீட்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

ரூ.25 கோடி கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வ தாக கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான தம்பதி மீட்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.25 கோடி கடன்

கோவை செட்டிவீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது64). இவருடைய மனைவி தனலட்சுமி (54). இவர்கள் தங்க நகை வியாபாரம் செய்து வந்தனர்.

மேலும் நகை சீட்டிலும் சேர்ந்து சீட்டு எடுத்துள்ளனர். ஆனால் அதன்பிறகு சீட்டுக்கான பணத்தை இந்த தம்பதி செலுத்தவில்லை என்று தெரிகிறது.

மேலும் தங்கநகை வியாபாரத்துக்காக வாங்கிய கடனையும் செலுத்த வில்லை என்று தெரிகிறது. அந்த வகையில் அவர்களுக்கு மொத்தம் ரூ.25 கோடிக்கு மேல் கடன் சுமை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடன் கொடுத்த பலரும் ஸ்ரீதர் மற்றும் தனலட்சுமியிடம் பணம் திரும்ப கேட்டு வற்புறுத்த தொடங்கினர். ஆனால் அவர்களால் பணத்தை திரும்ப செலுத்த முடிய வில்லை.

தலைமறைவு

இந்த நிலையில் அவர்கள், தற்கொலை செய்து கொள்ள போவ தாக கடிதம் எழுதி வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

அவர்கள் எழுதி வைத்த கடிதத்தில், எனக்கு நிறைய கடன் ஆகி விட்டது. சீட்டு லோன் போட்டு, வட்டிக்கு மேல் வட்டி கட்டி மேலும் கடனாகி விட்டது. இதற்கு மேல் சமாளிக்க முடிய வில்லை.

கொரோனா நேரத்தில் தொழில் நஷ்டம் அடைந்து விட்டது. நாங்கள் பணம் கொடுத்த இடத்தில் எல்லாம் பணம் திரும்ப வரவில்லை.

நாங்கள் தான் காரணம்

என் கணவருக்கு 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. இதனால் நானும், என்னுடைய கணவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் தான் காரணம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடிவந்தனர். இந்த நிலையில் பீளமேட்டில் உள்ளஉறவினர் வீட்டில் அவர்கள் 2 பேரும் பதுங்கி இருந்தது போலீஸ் விசார ணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து தம்பதியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அவர் களிடம் நடத்திய விசார ணையில் கோடிக்கணக்கில் கடன் இருந்ததால் வேறு வழியின்றி வீட்டை விட்டு சென்றதாகவும், தற்கொலை எண்ணத்துடன் இருந்த தங்களை போலீசார் மீட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.


Next Story