கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீசியன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீசியன் மீட்பு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீசியன் மீட்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரையை சேர்ந்தவர் முத்து(வயது 60). எலக்ட்ரீசியனான இவர் நேற்று காலை அரணாரையில் இருந்து பெரம்பலூருக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி முத்துவை உயிருடன் வெளியே மீட்டு கொண்டு வந்தனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


Next Story