சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்


சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்
x

சிலை வாங்குபவர்கள் போல் நடித்து பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீரபுத்திரன் என்ற நபரின் வீட்டில் பழங்கால உலோகச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சிலை வாங்குபவர்கள் போல் நடித்து வீரபத்திரனை அணுகிய போலீசார், அவரிடம் பழங்கால உலோக சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அந்த சிலைகளுக்காக 60 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி, மானாமதுரை அருகே வீரபுத்திரனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, கருப்பசாமி உள்ளிட்ட பழங்கால சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story