குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு


குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி பிரிவு அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பெ.நா.பாளையம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவு அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று மாலை 6 மணிக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டது.

உடனே அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு அழுதபடி கிடந்தது.

உடனே இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆண் சிசுவை உயிருடன் மீட்டு, பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அந்த சிசுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த ஆண் சிசுவை அங்கு வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story