கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு


கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
x

பனவடலிசத்திரத்தில் கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த ேதாட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் நேற்று காலை புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து விட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கிணற்றில் விழுந்து தவித்த புள்ளிமானை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் புள்ளிமானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள காட்டில் விடப்பட்டது.

1 More update

Next Story