'டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் உள்ளவர்களை மீட்பதே முக்கியமானது' - அமைச்சர் முத்துசாமி


டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் உள்ளவர்களை மீட்பதே முக்கியமானது - அமைச்சர் முத்துசாமி
x

டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு,

டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமானது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஒரு டாஸ்மாக் கடையை மூடினால், அந்த பகுதியில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று மது அருந்தும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

டாஸ்மாக் கடைகளை மூடும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்பதை விட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருகிறோம் என்பதே முக்கியமானது. இதற்காக கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story