கீழடியில் டிரோன் மூலம் ஆய்வு


கீழடியில் டிரோன் மூலம் ஆய்வு
x

கீழடியில் டிரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

கீழடியில் மத்திய-மாநில அரசுகளின் மூலம் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. தற்போது 8-வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் இந்த பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் டிரோன் மூலம் அகழாய்வு இடங்கள் சர்வே ெசய்யப்பட்டன. மேலும் சுமார் 70 மீட்டர் உயரம் வரை டிரோனை பறக்கவிட்டு, அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்கள், சுற்றுப்பகுதி இடங்கள் படம் பிடிக்கப்பட்டன.

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கீழடிக்கு வந்து, அகழாய்வு குழிகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டனர். நேற்று இத்தாலி நாட்டை சேர்ந்த இருவர் வந்து பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.Next Story