எடப்பாடி பகுதியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு


எடப்பாடி பகுதியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
x
சேலம்

எடப்பாடி

எடப்பாடி பஸ் நிலையம், நகராட்சி வணிக வளாகம், ராஜாஜி பூங்கா நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள் மற்றும் சாலையோர உணவு விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் குமரகுருபரன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவு ரசாயன பொருட்கள் மற்றும் கூடுதல் நிறத்திற்காக வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட உணவு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 15 துரித உணவு கூடங்களில் இருந்து உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்காக சென்னைக்கு அனுப்பினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிறு கடைகள், குளிர்பான விற்பனை நிலையம் மற்றும் ஓட்டல்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story