டிஜிட்டல் பேனர் வைக்க எதிர்ப்பு


டிஜிட்டல் பேனர் வைக்க எதிர்ப்பு
x

சங்கரன்கோவிலில் டிஜிட்டல் பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, சங்கரன்கோவில்- கழுகுமலை ரோட்டில் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அங்கிருந்த டிஜிட்டல் பேனரை சிலர் அகற்றினர். அப்போது போலீசாருக்கும், ஒரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. இதுதொடர்பாக 3 பேரை சங்கரன்கோவில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story