கல்குவாரி மூலம் பெறப்படும் கனிமவள நிதியை பெற்று தர வேண்டும்கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்


கல்குவாரி மூலம் பெறப்படும் கனிமவள நிதியை பெற்று தர வேண்டும்கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Aug 2023 7:30 PM GMT (Updated: 15 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேவுஅள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டம் சீரியம்பட்டி முனியப்பன் கோவில் வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் பவுன்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கரடிகுண்டு பகுதியானது பேவு அள்ளி ஊராட்சியை சேர்ந்தது, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பேவுஅள்ளி ஊராட்சி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி மூலம் பெறப்படும் கனிமவள நிதி நல்லூர் ஊராட்சிக்கு செல்கிறது. இதனை உடனே தடுத்து நிறுத்தி பேவுஅள்ளி ஊராட்சி நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story