சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

கரூரில் நேற்று தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்பரசு தொடக்க உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் 1,066 சுகாதார ஆய்வாளர்கள் நிலை 2-க்கான நிரந்தர பணியிடங்களில் பயிற்சி மூப்பு மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை 2 நிரந்தர பணியிடங்களுக்கான கருத்துருவிற்கு ஒப்புதல் கிடைத்திட வேண்டும்.

தனியார் கல்லூரிகளில் சுகாதார ஆய்வாளர் பயிற்சியை பயிற்சிக்கான உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். ஊதிய உயர்வு, பணிபாதுகாப்பு வழங்கிட வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் விடுபட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி கிடைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் வினோத், மாநிலக்குழு சஞ்சீவி உள்பட சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story