விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தேசிய மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் அரியலூர் மாவட்ட அமைப்புக்கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட செயலாளர் அறிவழகி கலந்து கொண்டு சங்க செயல்பாடு குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்திட வேண்டும். விடுபட்ட மகளிருக்கு தமிழக அரசு உரிமைத்தொகையை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு மாதா மாதம் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆனந்தமேரி நன்றி கூறினார்.