காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், செஞ்சி மஸ்தான், தயாநிதி மாறன் எம்.பி, ஜவஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story