காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

நாமக்கல்லில் காந்திஜெயந்தியையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல்

காந்தி ஜெயந்தியையொட்டி நாமக்கல்லில் உழவர் சந்தை அருகே உள்ள காந்தி சிலைக்கு நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் நலச் சங்கத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதேபோல் காந்திஜி இலை அமைப்பு கமிட்டித் தலைவர் ரங்கராஜன், பொருளாளர் சீனிவாசன், கோவிந்தராஜ், செயலாளர் ஏகாம்பரம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், நாமக்கல் கவிஞர் பேரவை மோகன் மற்றும் உறுப்பினர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story