திண்டிவனத்தில் கவுதம் புட்ஸ் உயர்தர உணவகம் திறப்பு விழா அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


திண்டிவனத்தில்  கவுதம் புட்ஸ் உயர்தர உணவகம் திறப்பு விழா  அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x

திண்டிவனத்தில் கவுதம் புட்ஸ் உயர்தர உணவகம் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கவுதம் புட்ஸ் என்கிற உயர்தர உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, வக்கீல் சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் வெண்ணிலா கபிலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய உணவகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.

புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜாராம், மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி, விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், ஜெயராஜ், ஆறுமுகம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரசாந்த், நகர விவசாய அணி சேது ராஜன், நெசவாளர் அணி சக்திவேல், நகர பொறியாளர் அணி புனிதன், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்க மன்னார் செட்டியார், ராம் டெக்ஸ் வெங்கடேசன், ஐடியல் கன்ஷ்ட்ரக்சன் முத்துக்குமரன், ஸ்வஸ்திக் பைனான்ஸ் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story