சேலம் மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடு
சேலம்
சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு போலீஸ் கமிஷனர் அனுமதி பெற வேண்டும். இந்த நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற 16-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story