தியாகதுருகத்தில் புகையிலை பொருட்களை விற்ற ஓய்வு பெற்ற கண்டக்டர் கைது
தியாகதுருகத்தில் புகையிலை பொருட்களை விற்ற ஓய்வு பெற்ற கண்டக்டர் கைது செய்யப்பட்டாா்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் உணவகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை, பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தியாகதுருகம் மீனாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 62) என்பதும், அவர் பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி, அவற்றை தியாகதுருகம் பகுதிக்கு கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தர்மலிங்கத்தை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 870 மதிப்பான சுமார் 5 கிலோ 490 கிராம் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும், தனது இலவச பேருந்து அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் பெங்களூரு சென்று புகையிலை பொருட்களை வாங்கி வந்து தியாகதுருகத்தில் உள்ள ஒரு சில கடைகளில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.