ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலியானார்.
ஓய்வு பெற்ற எழுத்தர்
கோவை வேலாண்டிபாளையம் பகத்சிங் 2-வது வீதியை சேர்ந்தவர் சுகுணகலாதரன்(வயது 65). கோவை மாவட்ட கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகுணகலாதரன் ஓய்வு பெற்ற பிறகு திருமண தகவல் மையம் நடத்தி வந்தார். இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி சென்றார்.
சுவரில் மோதியது
கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் சென்றபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்தது. தொடர்ந்து சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சுகுணகலாதரன் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுணகலாதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.