ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனுஷ்கோடி, மாவட்ட செயலாளர் முத்துமாடன் வரவேற்று பேசினர். பொருளாளர் ஹக்கீம் வரவு-செலவு கணக்கு வாசித்தார். இதில், போக்குவரத்து பணியாளர் சங்க நிர்வாகி சித்தார்த்தன், காவல்துறை நல சங்க நிர்வாகி ருத்ரபதி, சத்துணவு சங்க நிர்வாகி அயோத்தி, ஐ.சி.டி.சி. சங்க மாநில செயலாளர் வாசுகி, மின்வாரிய துறை சங்க நிர்வாகி வெங்கடசுப்புராம், மாநில புத்தாக்க பயிற்சியாளர் அருள்சாமி, முன்னாள் மாநில நிர்வாகி ராபர்ட், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி போஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர் சேர்முக பாண்டியன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் முத்துராமலிங்கம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூ திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 65 வயது முதல் கூடுதல் பென்சன் வழங்க வேண்டும், குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் விஸ்வம் நன்றி கூறினார்.