ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பென்ஷனர் நல சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் கந்தசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து மாநில அரசும் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியினை வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மருத்துவ செலவுகளை மீள பெறுவதில் ஏற்படும் காலதாமத்தினை தவிர்த்து விரைவில் வழங்கிட வேண்டும். 80 வயது தொடக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் அளிக்கலாம் என்ற கவுகாத்தி கோர்ட்டு 15.3.2018 மற்றும் சுப்ரீம் கோர்ட்டு 8.7.2019-ல் அளித்த தீர்ப்பினை தாமதம் இல்லாமல் உடனே அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓய்வூதியர்களுக்கான நேர்காணலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story