ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திரவியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது ரபீக் வரவேற்று பேசினார். இதில், மாவட்ட துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன், புத்தாக்க பயிற்சியாளர் அருள்சாமி, போக்குவரத்து பணியாளர் சங்க நிர்வாகி நீலமேகம், காவல்துறை நல சங்க நிர்வாகி முத்துச்சாமி, சத்துணவு சங்க நிர்வாகி ராமச்சந்திரன், லோகநாதன், செல்வகுமார், அலெக்ஸாண்டர், வாசுகி, வெங்கடசுப்புராம், சேர்முக பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.


Next Story