ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டுவிழா


ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டுவிழா
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:46 PM GMT)

சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டுவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க 30-வது ஆண்டு விழா சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆசிம், முனுசாமி, குணசேகரன், சுப்பராயன், அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதியழகன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கலியபெருமாள், கருவூலக அலுவலர் சீனிவாசன், தொழிலதிபர் ஜனார்த்தனன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆஷாபிஜாகிர்உசேன், அனைத்து வியாபாரி சங்க தலைவர் சேகர், செயலாளர் குசேலன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், நெல் அரிசி ஆலை சங்க தலைவர் வேலு, பொது சேவை நிர்வாகிகள் மஞ்சுளா, தீபா மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story