ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்
பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பு. தங்கராசன் தலைமையில் நடைபெற்றது. மாநில மைய துணை தலைவர் பக்கிரிசாமி, மாநில மைய இணை செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் துரைசாமி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தயாநிதி வரவு- செலவு கணக்குகளை வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் மோகன் கலந்து கொண்டு 75 வயதுள்ள உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
கூட்டத்தில், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ெரயில் பயண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் ஜீவரத்தினம் நன்றி கூறினர்