அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி


அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி
x

சந்தவாசல் அருகே அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 60), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.

இவர் இன்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் கேளூர் சந்தைமேட்டில் டீ குடிக்க வந்தார். பின்னர் அவர் சாலையோரம் சமத்துவபுரம் நுழைவுவாயில் அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது வேலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக முருகனின் மகன் ஆனந்தன் (35) சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story